அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி செந்தில் குமரன் சாலை விபத்தில் நேற்று உயிரிழந்தார். இவர் சேலம் கொண்டாலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இவர் திடீரென விபத்தில் மரணமடைந்த செய்தியை கேட்டு எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிர்ச்சி அடைந்ததோடு அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் வாகன ஓட்டிகள், குறிப்பாக இளைஞர்கள் சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து மிகவும் பாதுகாப்புடன் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.