
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே கூட்டணி உடைந்ததற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக தேசிய தலைமை அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தான் தலைவர் பதவிக்கான ரேசில் இல்லை என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு மீண்டும் புதிய தலைவரை நியமிக்க நான் யாரையும் பரிந்துரையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். புதிய மாநில தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அது முடிந்து அறிவிப்பு வெளியான பிறகு நாங்கள் நிறைய பேசுவோம் என்றார். நான் தமிழ்நாட்டு அரசியலில் மட்டும் தான் தொடர்வேன் டெல்லிக்கு செல்லமாட்டேன் என்றும் கூறினார். அதிமுக குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார். மேலும் அண்ணாமலை மத்திய அமைச்சராக இருக்கிறார் என்று செய்தி வெளியான நிலையில் தற்போது அதனை அண்ணாமலை மறுத்து டெல்லி அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.