
சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுக்கு மணிமண்டபம் மட்டும் போதாது. வன்னியருக்கு உள் ஒதுக்கீடும் வேண்டும். அதோடு அவர்களுக்கு அதிக துரோகத்தை செய்தது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். எம்ஜிஆர் காலத்தில் அவர்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு தேவை என்பது குறித்து அவருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் மருத்துவர் ராமதாஸ் எடுத்துக் கூறினார். அதன் பிறகு அவர் புரிந்து கொண்டார். இதையடுத்து அவரது ஆட்சியில் வன்னியருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராகியது.
கலைஞர் கூட அவர்களுக்கு ஏதோ கொஞ்சம் செய்திருந்தார். அவர் ஆட்சியில் எம்பிசி வகுப்பினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தார். ஜெயலலிதா அவர்களுக்கு நல்லதும் செய்யவில்லை, கெட்டதும் செய்யவில்லை. எடப்பாடி ஆட்சியில் 10.5% உள்ளு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் முறையாக வாதாடதால் உள் ஒதுக்கீடு ரத்தானது. ஆனால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு கழித்து மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்று கூறினார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால் நானும் ராமதாசும் பலமுறை முதலமைச்சரை சந்தித்து விட்டோம் என்று கூறினார்.