முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது அவரது இல்லத்தில் அரங்கேறி வரும் காட்சிகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓ.பி.எஸ்-ன் இல்லத்தின் நுழைவு வாயிலில் (Gate) பல ஆண்டுகளாகப் பொறிக்கப்பட்டிருந்த அதிமுகவின் அடையாளமான ‘இரட்டை இலை’ சின்னம், தற்போது வெல்டிங் மெஷின் மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டு வருகிறது.

​இன்று ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊருக்கு வர உள்ள நிலையில், அவரது இல்லம் முழுவதும் திமுகவின் கருப்பு-சிவப்பு வண்ணங்களில் மாற்றப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ், தற்போது திமுகவுடன் இணைந்துள்ளதன் அடையாளமாகவே இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது. இரட்டை இலை சின்னம் அகற்றப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இபிஎஸ் தரப்பினர் இதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.