கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவளிப்பதாக கோயம்புத்தூர் கம்மவார் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பாஜகவிற்கு ஆதரவளிப்பதாக கூறிய இதே சங்கத்தின் நிர்வாகி கோபால் என்பவரை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும், யாரும் குழப்பமடைய வேண்டாமென அச்சங்கத்தின் வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்துள்ளார். கோவையில் 9 லட்சம் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் இருப்பதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்