உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தளபதியாக இருந்த கர்னால் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுத படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தேசிய வீரராக கொண்டாடப்பட்ட வலேரி ஜலுஷ்னி என்பவர் தான் இதற்கு முன்னதாக ஆயுதப்படை தளபதியாக இருந்துள்ளார். சமீப காலங்களாக ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் ட்ரோன் மற்றும் உயர்ரக தொழில்நுட்ப ஆயுதங்கள் மூலமாகத்தான் மிகப்பெரிய ரஷ்ய ராணுவத்துடன் போட்டியிட முடியும் என்று வலேரி நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

அதோடு போர் வீரர்கள் அதிக அளவில் தேவை அதற்கு சட்ட மாற்றங்கள் வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் வலேரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவானது. இந்த நிலையில் தான் ஆயுதப்படை தளபதி மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.