பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அவரது தொண்டர்கள் சுயேசையாக தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 336 இடங்களில் 169 இடங்களை கைப்பற்றும் கட்சி தான் ஆட்சியில் அமரும் என்று கூறப்படுகிறது.

4ல் 3 பங்கு தேர்தல் முடிவுகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இம்ரான் கானின் ஆதரவு உடைய 98 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர் என கூறப்படுகிறது. அதைப்போன்று மூன்று முறை பிரதமராக ஆட்சியில் இருந்த நவாஸ் ஷெரிப் கட்சி 69 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் முன்னாள் பிரதமராக இருந்து சுட்டு கொலை செய்யப்பட்ட பெனாசீர் பூட்டோவின் மகன் பிலால் பூட்டோ சர்தாரியின் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிற இடங்களில் சில கட்சிகள் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.