கடந்த 8ஆம் தேதி பாகிஸ்தான் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதனிடையே 4ல் 3 பங்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் அரசு வாகனத்திற்கு தீ வைத்ததால் கண்ணீர் புகை கொண்டு வீசி கலவர காரர்களை விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த மோதலில் ஆதரவாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு 6 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.