இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 4 மாதங்களை கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் ஐநா நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் பணியாளர்கள் சிலர் ஹமாஸ் அமைப்புக்கு உளவு வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு வைத்தது.

இந்நிலையில் காசாவில் அமைந்துள்ள பாலஸ்தீன் அகதிகளுக்கான ஐநா நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் தலைமையகத்தின் அடியில் ஹமாஸ் பயன்படுத்திய சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கத்தில் ஒரு நபர் நடந்து செல்லும் அளவுக்கு உயரம் இருப்பதாக கூறிய இஸ்ரேல் இது தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதோடு ஐநா தலைமையகத்தின் சர்வர் அறையில் உள்ள கட்டமைப்பில் இருந்து தான் இந்த சுரங்கத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.