
கோவை கொடிசியா மைதானத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மேற்கு மண்டலம் தங்களுடைய பட்டா நிலம் என்பது போல நினைத்துக் கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல் லாபம் தேடிய கட்சிகளின் உண்மையான நிலை என்ன என்பதை திமுக கூட்டணிக்கு அளித்த வெற்றியின் மூலமாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தி உள்ளனர்.
இதனால்தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.