அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, 100-க்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரிக்க வந்த போலீசாரிடம், POSH குழு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

காவல்துறை பல்கலை.க்கு வந்து விசாரணை செய்யும் போதுதான் இந்த சம்பவம் POSH குழுவில் இருந்த மற்றவர்களுக்கு தெரியவந்தது. அதை வைத்துதான் POSH குழு நேரடியாக புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தேன். நான் தெரிவித்தது தவறான பொருள்படும்படி அமைந்துவிட்டது.