பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் குறித்து வெளியிட்ட கருத்து அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் (X) தளத்தில் அண்ணாமலையை மிகக் கடுமையாகச் சாடிப் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை ஒரு ஜோக்கர் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், பாஜக தேசிய தலைமையையும் ஏதோ இவருக்காகத்தான் அவர்கள் காத்திருப்பது போலவும், இவரால் தான் அவர்கள் வளர வேண்டும் என்பது போலவும் அண்ணாமலை சிறுமைப்படுத்திப் பேசுகிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும் பேசிய அவர், அண்ணாமலை ஒரு பெரிய ஏமாற்றுக்காரன் (Con man) என்றும், அவர் ஒரு தலைவரே கிடையாது, வெறும் ஒரு அதிகாரி (Bureaucrat) மற்றும் தமிழ்நாட்டிற்கு முற்றிலும் துரோகம் இழைத்த ஒரு துரோகி (Betrayer) என்றும் மிகக் காரசாரமாகத் தாக்கிப் பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
