தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், பல கட்சிகள் இணைந்து நடத்தும் ‘கூட்டணி ஆட்சி’தான் அமையும் என்றும் அவர் தீர்க்கமாகப் பேசியுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட அவர் கணித்ததைப் போலவே எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையை நோக்கிச் செல்வதால், அவரது அன்றைய பேச்சு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் இந்தச் சூழலில், அண்ணாமலையின் இந்தத் தீர்க்கதரிசனக் கணிப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் உற்று கவனிக்கப்படுகிறது.