தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக அண்ணாமலை ஜோ பைடனாக மாறப் போகிறார். கூரை ஏறி கோழி பிடிக்காதவர் வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறாராம் என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது. இதுபோன்றுதான் அண்ணாமலையின் செயல் இருக்கிறது. தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாத அவர் வெளிநாட்டில் போய் என்ன செய்யப் போகிறார்.
அவருடைய வருகையை நினைத்து ஜோ பைடன் ஒரு ஆர்எஸ்எஸ் கும்பல் வருகிறதே என்று அச்சத்தில் இருக்கிறார். இவரை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஜோ பைடன் மற்றும் டிரம்ப் ஆகியோர் ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அவர் காங்கிரஸ் கட்சி திமுகவின் அடிமை என்கிறார். அவருக்கு காங்கிரஸ் வரலாறு தெரியாது. நல்ல தலைவர்கள் இருப்பதால்தான் தமிழகத்தில் நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அவருடைய கருத்து சுதந்திரம் என்பதால் அவர் பேசலாம் அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றார்.
