வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்யமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது, அதற்குப் பதிலடி கொடுக்கத் தான் எழுந்திருக்க நினைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், முதல்வர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வரும்போதே, “இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டும்தான் முக்கியம், அதனால் நம் தரப்பிலிருந்து யாரும் பேச வேண்டாம்” என்று மிகத் தெளிவாகக் கூறிவிட்டதாகத் தெரிவித்தார். முதல்வர் விஜய்யின் இந்தத் திட்டவட்டமான உத்தரவு காரணமாகவே, தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்று அமைதி காத்ததாக ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
அன்னைக்கு சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நான் எந்திரிச்சு பேசலாம்னு தான் இருந்தேன் அண்ணன்@TVKVijayHQ என்ன தடுத்துட்டாரு ! 🤣🔥👌
~ @AadhavArjuna@TVKVijayHQ | @TVKPartyHQpic.twitter.com/cj3MhrU4vt
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 14, 2026
தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, அரசின் முக்கியப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்ற முதல்வரின் அரசியல் முதிர்ச்சியே இதற்குப் பின்னணியில் இருந்ததாக அவர் பெருமிதத்துடன் கூறினார். வில்லிவாக்கத்தில் அவர் பேசிய இந்த ரகசியத் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் ‘தமிழக வெற்றிக் கழக’ தொண்டர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
