தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை உறுதிப்படுத்தி பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பாஜக இன்னும் சில கட்சிகளை தங்கள் கூட்டணிகளில் இணைத்து வர முயற்சி செய்யும் நிலையில் தமிழகத்தில் அடுத்த தேர்தலில் நான்குமுனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பற்றி பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் டெல்லிக்கு சென்றது சட்ட ரீதியான நடவடிக்கை. அவரை கூட்டணிக்கு அழைப்பதற்காக அல்ல. எங்களுக்கு விசில் உடனடியாக தேவைபடாது. எங்களின் கூட்டணி கட்சியான குக்கரிலும் கூட விசில் இருக்கிறது.
அதன்பிறகு எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர இருப்பதாகவும் அது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் அடுத்து வரும் தேர்தலில் நடிகர் விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அமமுக கட்சியின் சின்னம் குக்கர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
