
டீம் இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் விராட் கோலிக்கு சிறந்த பீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டது.
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பெற்ற பிறகு, விராட் கோலிக்கு டிரஸ்ஸிங் அறையில் ஒரு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், கோலி பேட்டிங்கில் 85 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸை விளையாடிய நிலையில், அவர் பீல்டிங்கிலும் சிறப்பாக காணப்பட்டார். இந்த போட்டியின் பின்னர், அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சி பணியாளர்கள் முன்னிலையில் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் கோலிக்கு சிறந்த பீல்டர் விருதை வழங்கினார். விராட் இந்த சிறப்பு பதக்கத்தை பெற்றதை முற்றிலும் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.
பதக்கத்தை பற்களால் கடித்து கொண்டாடினர் :
விராட் கோலிக்கு பதக்கம் வழங்கப்படும் வீடியோவை பிசிசிஐ சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதக்கத்தை அறிவிக்கும் போது, இன்றைய போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரருக்கு டி.திலீப் பதக்கத்தை வழங்குவார் என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் கூறுகையில், இன்றைய போட்டியில் இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் சிறப்பாக பீல்டிங் செய்தனர், ஆனால் விராட் கோலி போட்டி முழுவதும் பீல்டிங்கில் ஆற்றலைப் பேணி அனைவரையும் ஊக்கப்படுத்திய விதம் மிகவும் சிறப்பானது, இதுவே முதல் முறை. எனவே பதக்கம் அவருக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். அப்போது அனைத்து வீரர்களும் சிரித்துகொண்டு இருந்தனர்.
பின் கோலி பதக்கத்தைப்பெற,ஆர்வத்துடன் முன்னோக்கி விரைந்தார். இதையடுத்து டி.திலீப் கோலிக்கு பதக்கத்தை கழுத்தில் போட்டுவிட்டார்.பின் கைகளை உயர்த்தி கொண்டாடிய விராட், பதக்கத்தை பல்லில் பிடித்தபடி சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தார். அப்போது இந்திய வீரர்கள் மற்றும் சக பயிற்சியாளர்கள் அனைவரும் கைதட்டி சிரித்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
கோலி ஸ்லிப்பில் மிட்செல் மார்ஷிடம் அபாரமான கேட்ச் எடுத்தார்.
இந்தப் போட்டியில், டாஸ் இழந்து முதலில் பந்துவீச வந்த இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் தேவைப்பட்டது. ஜஸ்பிரித் பும்ராவின் 3வது ஓவரின் இரண்டாவது பந்தில், பந்து மிட்செல் மார்ஷின் மட்டையின் வெளிப்புற விளிம்பில் பட்டு பின்னால் முதல் ஸ்லிப்பை நோக்கி மிக வேகமாக சென்றது, அதை கோலி இடதுபுறமாக குதித்து அழகாக கேட்ச் செய்தார். இது தவிர இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் ஆடம் ஜம்பாவின் இரண்டாவது கேட்ச்சை கோலி கைப்பற்றினார்.
Virat Kohli – a gem of a character. pic.twitter.com/FWrsYvzEo2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 9, 2023
No man of the match award for Kohli but He at least got a medal. 😂 pic.twitter.com/neFpJHR9Oo
— Aditya Saha (@Adityakrsaha) October 9, 2023
📽️ BTS from the #TeamIndia 🇮🇳 dressing room 😃👌 – By @28anand
A kind of first 🥇 #CWC23 | #INDvAUS
And the best fielder of the match award goes to….🥁
WATCH 🎥🔽https://t.co/wto4ehHskB
— BCCI (@BCCI) October 9, 2023