சமூக ஊடகங்களில் அவ்வப்போது ஏதேனும் ஒரு காணொளி வெளியாகி வைரலாகும் அவ்வகையில் இப்போது ஒரு காணொளியில் ரயில் கேட் உள்ள இடத்தில் நீல நிற சட்டை அணிந்த நபர் கேட்டின் ஒரு பக்கத்தில் நின்று, வாகனங்களை கடக்க அனுமதிக்கிறார். பின்னர், அங்கு நிற்கும் மற்றவர்கள் ஏதோ ஒன்றை கீழே இறக்க சொல்கிறார்கள், ஒருவேளை அது கேட்டை குறிக்கலாம். அதன் பிறகு, நீல சட்டை அணிந்த அந்த நபர் அங்கிருந்து நடந்து சென்று, சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறுகிறார். இதிலிருந்து, அவர் ரயிலின் லோகோ பைலட் என்பது தெரிகிறது. அவர் ரயிலை நிறுத்திவிட்டு, வாகனங்களை பாதுகாப்பாக கடக்க வைத்து, விபத்து ஏற்படாமல் தடுத்துள்ளார்.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 17, 2025
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் *gharkekalesh* என்ற கணக்கிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மேற்பகுதியில், “எவ்வளவு நல்ல மனிதர், தனது வண்டியை விட்டு இறங்கி போக்குவரத்தை சரி செய்கிறார்” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 4,000-த்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்” என்று கூறினார். இந்த வீடியோ மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
