உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என்பதால் அதன் வரலாற்றை மாற்றி எழுதக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ் என்பவர், மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனைதான் தாஜ்மஹால் எனவும், முகலாய மன்னரான ஷாஜகான் அதனை சீரமைக்கும் பணியை தான் மேற்கொண்டார் எனவும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் தாஜ்மஹால் கட்டிடம் முழுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேலும் உலகின் காதல் சின்னமாக தாஜ்மஹால் கருதப்படுகிறது.