மத்திய மற்றும் மாநில அரசு துறையின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் பதவி நிலை வாரியாக வழங்கப்படுகிறது. அதேசமயம் பொருளாதார நிலை மற்றும் விலைவாசி நிலவரத்தை பொறுத்து 10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதியக்குழு புதிதாக அமைக்கப்படுகின்றது. தற்போது ஏழாவது ஊதிய குழுவின் படி ஊழியர்களுக்கு 18000 ரூபாய் குறைந்தபட்ச ஊதியமாகவும் 56 ஆயிரத்து 900 ரூபாய் அதிகபட்ச ஊதியம் ஆகவும் இருக்கிறது. இந்த நிலையில் ஏழாவது ஊதிய குழுவின் செயல்பாட்டு காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் எட்டாவது ஊதிய குழுவை மத்திய அரசு அமைப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு எட்டாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது. புதிய ஊதிய குழுவை அமைப்பதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.