தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் இலியானா. தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயின் நண்பன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக திரைப்படங்கள் நடித்துள்ளார். கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இருந்தாலும் அவரின் காதலர் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார். தற்போது ஒன்பது மாதம் கர்ப்பமாக இருக்கும் இல்லையா தன்னுடைய காதலர் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். Date night என்று குறிப்பிட்டு இரவு இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இலியானா வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.