உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், தன்னைத் தொடர்ந்து கிண்டல் செய்து வந்த வாலிபரை, காவல் நிலையம் முன்பே ஒரு பெண் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அலிகார் மாவட்டம் கங்கிரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இது குறித்துப் புகார் அளிக்க அந்தப் பெண் தனது கணவருடன் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது, சம்பந்தப்பட்ட வாலிபர் அவ்வழியாக பைக்கில் செல்வதைக் கண்ட தம்பதியினர், அவரைத் தடுத்து நிறுத்தி கீழே தள்ளினர்.
ஆத்திரமடைந்த அந்தப் பெண், வெறும் 30 வினாடிகளில் அந்த வாலிபரை 25 முறை செருப்பாலும், 8 முறை கால்களாலும் சரமாரியாகத் தாக்கினார். பெண்ணின் கணவர் அந்த வாலிபரின் கைகளைப் பிடித்துக் கொள்ள, பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள் யாரும் வாலிபரைக் காப்பாற்ற முன்வரவில்லை.
मनचले की सरेआम ‘क्लास’, पति ने गिराया… पत्नी ने चप्पलों से उतारा आशिकी का भूत!
UP के अलीगढ़ में लंबे समय से एक शादीशुदा महिला को परेशान कर रहा मनचला आखिरकार फंस गया।महिला ने जब अपनी परेशानी पति को बताई, तो दोनों ने तय किया—अब चुप नहीं रहेंगे।
मामला उस वक्त गरमा गया जब दम्पति… pic.twitter.com/3F2isMArF1— TRUE STORY (@TrueStoryUP) February 23, 2026
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், அந்த வாலிபரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், “அந்த வாலிபரின் அநாகரீகமான செயலால் ஆத்திரமடைந்த பெண் அவரைத் தாக்கியுள்ளார். பெண் தரப்பில் இதுவரை எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப்படவில்லை. இருப்பினும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த பிரிவின் கீழ் அந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார். மேலும் சிவப்பு நிறப் புடவை அணிந்து, முகத்தை மூடிய நிலையில் அந்தப் பெண் காட்டிய இந்தத் துணிச்சல் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
