உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரத்தில் குடிபோதையில் இருந்த பாம்பாட்டி ஒருவர், கையில் பாம்பை பிடித்துக் கொண்டு கடைகளில் புகுந்து, அங்கிருந்த மக்களை மிரட்டியுள்ளார். தேநீர் குடித்து கொண்டிருந்த பொதுமக்கள் பாம்பைக் கண்டு பயந்தோடி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சம்பவத்தின்போது, பாம்பாட்டி ஒருவர், ஒருவர் கழுத்தில் பாம்பை வைத்தார். பின்னர் அருகில் இருந்த பெண் காவலரின் மேல் அந்த பாம்பை வீசினார். திடுக்கிட்ட காவலர் அலறிக்கொண்டு ஓட, பாம்பு அருகில் இருந்த மற்றொரு போலீசாரை நோக்கி நகர்ந்தது. அவரும் வாகனத்தை விட்டுவிட்டு ஓடியுள்ளார்.

பின்னர், அந்த பாம்பாட்டி பாம்பை மீண்டும் ஒரு கூடையில் வைத்து அமைதியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், அவரை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.