சமூக வலைதளங்களில் போலீஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் ஆடும் நடன வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது. சன்னி தியோலின் புகழ்பெற்ற “சாத் சமுந்தர் பார்” பாடலுக்கு, அந்த நபர் ஆடும் விசித்திரமான அசைவுகள் பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கின்றன.

நவராத்திரி விழாவின் போது எடுக்கப்பட்டதாகத் தோன்றும் இந்த வீடியோவில், சுற்றியுள்ள கூட்டத்தைப் பற்றி கவலைப்படாமல் அவர் காட்டும் எனர்ஜி அனைவரையும் கவர்ந்துள்ளது.

குறிப்பாக, பாடலின் வரிகளுக்கு ஏற்ப அவர் தண்ணீரில் நீந்துவது போலச் செய்யும் சைகைகள் இணையத்தில் நகைச்சுவையை அள்ளி வருகின்றன.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அவர் ஒரு நிஜ போலீஸ் அதிகாரி என்று நினைத்தனர். ஆனால், விசாரணையில் அவர் ஒரு உண்மையான போலீஸ்காரர் இல்லை என்பதும், இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை உருவாக்கும் ‘ரவி போகத்’ என்பதும் தெரியவந்துள்ளது. இவர் பொழுதுபோக்கிற்காக இது போன்ற வேடிக்கையான வீடியோக்களைப் போலீஸ் சீருடையில் பதிவிட்டு வருகிறார்.

இந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருவதுடன், பலரும் சிரிப்பு எமோஜிகளைப் பகிர்ந்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.