தமிழ் சினிமாவில் விஜய் நடித்த குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் இறுதியாக கலகத் தலைவன் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிக்கப் போவது கிடையாது எனவும் அமைச்சராக மட்டுமே மக்கள் சேவையை தொடர்வேன் எனவும் அறிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்து வருவதுடன் விநியோகமும் செய்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இதுவரை 16 படங்களில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு 33 கோடி என கூறப்படுகிறது. இவரிடம் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 5,‌ ரூ. 1.60 கோடி மதிப்புள்ள ஹம்மர் எஸ்வியூ, ரூ. 1.79 கோடி மதிப்புள்ள மசாரிட்டி கிரான் டியூரிஷ்மோ, ரூ. 1.04 கோடி மதிப்புள்ள ஃபோர்ஸ் கேயென் போன்ற கார்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.