ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் அக்டோபர்  மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்   வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறையாகும். 5 ஞாயிற்ற கிழமைகள் தவிர்த்து, அக்., 2 காந்தி ஜெயந்தி, அக்., 14 இரண்டாவது சனி, அக்., 23, 24 ஆயுத பூஜை, விஜய தசமி, அக்., 28 நான்காவது சனி ஆகிய நாட்கள் விடுமுறை தினமாகும். வங்கி செல்பவர்கள் இதை பொறுத்து தங்களது பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். வடஇந்தியாவில் பண்டிகை நாட்கள் அதிகமாக இருப்பதால், அங்கு வங்கி விடுமுறை நாட்களும் அதிகம்.