‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் (தலைவர் 170) படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள்  இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இப்போது நான்  செல்கிறேன். அடுத்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும்.170வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.