சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் அறிவுத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன் தான் பயணித்த அனுபவங்களை நினைவுகூர்ந்த துரைமுருகன், “திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பிறகு, ஒரு காலத்தில் உதயநிதி திமுக தலைவராக வருவார்.

அப்போது அவர், திமுக தலைவராக இருந்த கருணாநிதியை விடவும், இப்போதைய தலைவர் ஸ்டாலினை விடவும் சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவராக இருப்பார்” என்று பாராட்டினார். துரைமுருகனின் இந்தப் புகழுரையை அங்கிருந்த தி.மு.க.வினரும் கைதட்டி வரவேற்றனர்.
ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று, ராஜேந்திர சோழனைப் போல ஆட்சி செய்வார் என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுப் பேசியது குறிப்பிடத்தக்கது.
