பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது வர்ணனையாளராக உள்ள சனா மிர், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை – பாகிஸ்தான் போட்டியில், நடாலியா பெர்வைஸ் பேட்டிங் செய்ய வந்தபோது, அவர் “ஆசாத் காஷ்மீர்” பகுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார். பின்னர் உடனே தன்னைத் திருத்திக் கொண்டாலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
Player ‘from Azad Kashmir’ is this kind of commentary allowed?
And then they say keep politics away from sports. pic.twitter.com/1HSHjRWMZG
— Lala (@FabulasGuy) October 2, 2025
“>
இந்த குறிப்பை, இந்தியா “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடும் நிலையில், சனா மிர் செய்த கூற்று அரசியல் ரீதியாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
Player from ‘Azad Kashmir’ is this kind of commentry allowed?
Then they say keep politics away from sports.#pakvban #INDvWI pic.twitter.com/J0vp0aOQOT
— its Shruti (@Shruti_v31) October 2, 2025
“>
கிரிக்கெட் வீரராக இருந்து வர்ணனையாளராக மாறிய அவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவியதால், பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தச் சம்பவம் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
