மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியின் போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளரான சனா மிர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் – வங்கதேசம் போட்டியின் போது, நடாலியா பெர்வைஸை “காஷ்மீரைச் சேர்ந்தவர்” என கூறிய பின்னர், “ஆசாத் காஷ்மீர்” என திருத்தியதால் பாகிஸ்தானுக்கே சாதகமான அரசியல் கூற்றாகக் கருதப்பட்டது. இந்த வீடியோ வைரலாக பரவி, சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்ப்பை தூண்டியது.

“>

 

ஐசிசி இதுவரை எந்த உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்காத நிலையில், சனா மிர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான விளக்கத்தை வெளியிட்டார். “நான் நடாலியாவின் சொந்த ஊரை குறிப்பிட்டது, அவர் சந்தித்த சவால்கள் மற்றும் அவரது பயணத்தை எடுத்துக்காட்டுவதற்காக மட்டுமே.

இதற்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. என் இதயத்தில் தீமையும் இல்லை; தயவுசெய்து இதை அரசியலாக்க வேண்டாம்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், வர்ணனையாளர்களின் பணி வீரர்களின் பின்னணியையும், அவர்களின் உறுதியையும் பார்வையாளர்களிடம் கொண்டுசெல்லுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“>

 

39 வயதான சனா மிர், தனது கருத்து எப்படி ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் வெளியானது என்பதை காட்டுவதற்காக, நடாலியா பெர்வைஸின் சுயவிவர ஸ்கிரீன்ஷாட்டையும் இணைத்தார். “வீரர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் குறித்து நான் செய்யும் ஆராய்ச்சியின் ஒரு பகுதியே இது.

தற்போது அதை மாற்றியிருப்பதை கவனித்துள்ளேன், ஆனால் நான் குறிப்பிட்டது இதைத்தான்” எனவும் விளக்கினார். இருந்தபோதிலும், அவரது இந்த விளக்கம் ரசிகர்களிடையே விவாதத்தை அடக்காமல், பாகிஸ்தான் – இந்தியா இடையிலான உணர்ச்சிவசப்பட்ட அரசியல் பின்னணியை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது.