கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலம் அமைக்க அனுமதி கோரிய நிலையில் தற்போது தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 கோடி செலவில் 115 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்தில் விரைவில் கண்ணாடி பாலம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைய உள்ள இந்த பாலத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.