சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் வீடியோ ஒன்றில், ஒரு சீன இளைஞர் தனது வீட்டில் பல்லிகளால் சூழப்பட்ட நிலையில் இருப்பது நெட்டிசன்களில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கமான @sports.jx.china-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.2 கோடிக்கும் அதிகமானோர் இதைப் பார்த்து, 65 ஆயிரத்துக்கும் மேல் பேர் லைக் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by 中国江西 (@sports.jx.china)

வீடியோவில், ஒரு இளைஞர் வீட்டு மாடியில் அமைதியாக நிற்கிறார். ஆனால் அவர் உடல் முழுவதும் தலை முதல் பாதம் வரை நூற்றுக்கணக்கான பல்லிகள் ஏறிக்கொண்டிருக்கின்றன.

வீடியோவைப் பார்த்த பலர் அதிர்ச்சி மற்றும் பயத்துடன் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். “இது எனக்கு நடந்திருந்தால், இரண்டே நொடியிலே இறந்துவிடுவேன்” என ஒருவர் பதிவிட்டிருந்தார்.