சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சென்னை ஐகோர்டில் தமிழக அரசு அது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யை பரப்புகிறார்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக அரைத்த மற்ற புளித்த பொய்களை எடப்பாடி பழனிச்சாமி அரைக்கிறார். இன்று சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் அரசியலை தாங்க முடியாமல் முகத்திரையை கிழித்துள்ளது.

இந்த விவகாரத்தை வெறும் விளம்பர நோக்கத்திற்காக எதிர்கட்சிகள் அணுகுவதாக கூறியுள்ளது. இதை நாங்கள் ஆரம்பம் முதலில் கூறிவரும் நிலையில் தற்போது அதனை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனாலும் கூச்சமே இல்லாமல் ஒரு பொய்யை எடப்பாடி பழனிச்சாமி திரும்பத் திரும்ப சொல்கிறார். அடிமை அதிமுக என்ற கட்சியின் எடப்பாடி கையில் இருக்குமோ இல்லையோ என்ற அச்சத்தில் காற்றில் கிழிந்து காணாமல் போகும் சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வருவதால் அதனை திசை திருப்ப சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்த பிறகும் தன் சுயநலத்திற்காக மாணவியின் எதிர்காலம் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் நடந்து கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக கை நழுவி விடும் என்ற பயத்தில் தான் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்கிறார். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து புகார் கொடுத்த பெண்களை எல்லாம் மிரட்டிய எடப்பாடி பழனிச்சாமி இன்னும் அந்த மன நிலையில் இருந்து வர வெளியே வரவில்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் அந்த எண்ணம் தொடர வேண்டும் என்று நினைக்க வேண்டாம் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வீண் வதந்தி பரப்பி அச்சுறுத்த நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியை மக்களே அகற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார்.