ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு காலனியில் பெற்ற தந்தை என்றும் பாராமல் வயதான முதியவர் ஒருவரை அவரது சொந்த மகனே கொடூரமாக அடித்துத் துன்புறுத்திய நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உறைந்து போகச் செய்துள்ளது.
அந்த வீடியோவில், தங்களுக்கு நல்ல வாழ்க்கையையும், நடக்கக் கற்றுக்கொடுத்த தந்தையையும் அவரது மகன் மீண்டும் மீண்டும் கன்னத்தில் அறைந்தும், உதைத்தும் சித்திரவதை செய்வது தெரிகிறது.
தந்தை தன் மகனைத் தடுக்க முயன்றும், அவன் இரக்கமின்றி அவரை இரத்தம் சொட்டச் சொட்ட சாகும் தருவாயில் தரையில் தள்ளிவிட்டுத் தொடர்ந்து தாக்கியுள்ளான். நிலைகுலைந்து போன அந்த முதியவரை வீட்டில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களும் காப்பாற்ற முன்வரவில்லை என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த வன்முறை நடந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களது வீட்டில் இருந்து அடிக்கடி இதுபோன்ற அலறல் சத்தங்கள் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக, அடி தாங்க முடியாமல் தரையில் விழுந்த முதியவரை அந்த மகன் இரக்கமில்லாமல் வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்று வீசியுள்ளான். இந்த வீடியோ இணையத்தில் பரவி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
कलियुग यह नहीं तो क्या है?
जिस पिता ने उंगली पकड़कर चलना सिखाया, आज उसी पर बेटा हाथ उठा रहा है।
यह सिर्फ एक परिवार की त्रासदी नहीं, बल्कि उन संस्कारों पर भी सवाल है जिन्हें हम अगली पीढ़ी तक पहुंचा रहे हैं।
बुजुर्गों का सम्मान केवल परंपरा नहीं, हमारी पहचान है। यदि माता-पिता ही…
— Paramveer Rathore 🇮🇳 (@ParamveerS36404) June 26, 2026
“>
இந்தச் சம்பவம் 15 நாட்களுக்கு முன்பு நடந்தது என்றும், பெற்ற தந்தையைக் கொடூரமாகத் தாக்கிய அந்த மகன் மீது தற்போது கடுமையான பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
