பீகார் மாநிலம் முசாபர்பூரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த நிதீஷ் குமார் என்ற இளைஞருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவர் மீனாபூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு முறையான சிகிச்சை எதுவும் வழங்காமல் உடைந்த காலுக்கு அட்டையை வைத்து கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் அந்த இளைஞரை கவனிப்பதற்கு கடந்த ஐந்து நாட்களாக எந்த ஒரு மருத்துவரும் வரவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பு கிளப்பியுள்ளது.