இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. நடப்பு ஆண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 5.39 கோடியை எட்டி, கடந்த ஆண்டை விட 42.85% அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் புகார் எண்ணிக்கை 10,000 பயணிகளுக்கு 0.28 பயணிகள் என்ற வீதம் மிகக் குறைவாக பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் வாயிலாக தகவல் வெளியாகியிருக்கிறது. 2023 ஏப்ரலில் உள்நாட்டு விமான சேவைகள் 0.47 சதவீதம் மட்டுமே ரத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.