ரயில்வேயில் முகவராக சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.80 ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது, IRCTC என்பது ரயில்வேயின் சேவை ஆகும். இதன் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்து பல வசதிகள் இருக்கிறது. தற்போது IRCTC-யின் உதவியோடு மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்.

இதற்கென நீங்கள் எங்கும் போக வேண்டியதில்லை, வீட்டில் அமர்ந்து சம்பாதிப்பீர்கள். அதே நேரம் இதற்கு நீங்கள் ஒரு டிக்கெட் முகவராக மாறவேண்டும். ஆன்லைனில் டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கு நீங்கள் IRCTC இணையதளத்துக்கு சென்று முகவராக விண்ணப்பிக்கவேண்டும். அதன்பின் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராகி வீட்டில் உட்கார்ந்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்க இயலும்.

IRCTC-ன் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராக நீங்கள் ஆகி விட்டால், தட்கல், ஆர்ஏசி உள்ளிட்ட அனைத்து வகை ரயில் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதில் ஏஜெண்டுகள் IRCTC-யிடம் இருந்து கணிசமான கமிஷனைப் பெறுவர். ஒரு ஆண்டுக்கு ஏஜெண்ட் ஆக IRCTC கட்டணம் ரூ.3999 செலுத்த வேண்டும்.

நீங்கள் 2 ஆண்டுகள் ஏஜெண்ட் ஆக விரும்பினால் ரூ.6999 செலுத்தவேண்டும். மேலும் முகவராக ஒரு மாதத்தில் 100 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ.10 கட்டணம் செலுத்தவேண்டும். 1 மாதத்தில் 101-300 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ.8 கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு மாதத்தில் 300 டிக்கெட்டுகள் மேல் முன்பதிவு செய்ய 1 டிக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.