டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் பயண தேதியை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம். பெரும்பாலும் மக்கள் பயணத்துக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்கின்றனர். பயணநேரம் நெருங்கையில், திட்டமிடல் மாறி டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டிய நிலை வருகிறது.

இதனிடையே ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயண நேரத்தை மாற்றி விடலாம். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் உங்களது பயணத்தின் தேதியை மாற்ற ரயில் புறப்படுவதற்கு சுமார் 48 மணிநேரத்துக்கு முன் முன்பதிவு கவுண்டரில் உங்களது டிக்கெட்டை ஒப்படைக்கவும். அதோடு பயணித்துக்கான புது தேதிக்கு விண்ணப்பிக்கவேண்டும். பயண வகுப்பை மேம்படுத்துவதற்குரிய விருப்பத்தையும் இங்கே பெறுவீர்கள்.

விண்ணப்பத்தை பெற்றபின் பயணத்தின் தேதி மற்றும் வகுப்பு இரண்டுமே மாற்றப்படும். அதே நேரம் தேதியை மாற்றுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. எனினும் நீங்கள் வகுப்பை மாற்றினால், அந்த வகுப்பின் கட்டணத்தின் அடிப்படையில் பணம் வசூலிக்கப்படும். இந்த ஈஸியான வழியில் பயணத்தின் தேதியை மாற்றிக்கொள்ளலாம். இதில் எவ்விதமான பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்கவேண்டி வராது.