பறவைகள் பொதுவாக உணவு உண்ண தங்கள் அலகைப் பயன்படுத்தினாலும், கருப்பு கிளி என்று அழைக்கப்படும் Palm Cockatoo தனது நாக்கை முக்கியமாக உபயோகிக்கிறது. இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், இந்த கருப்பு கிளிக்கு ஒரு வேர்க்கடலை கொடுக்கப்படுகிறது. அது தனது அலகால் வேர்க்கடலையை அழகாக உடைத்து, பின்னர் நாக்கின் உதவியுடன் கடலை எடுத்து உண்கிறது.
இந்த அழகான மற்றும் ஆச்சரியமான செயல் பதிவு செய்யப்பட்ட காணொளி, சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
