தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்திலும் தனித்துவமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில், அஜித் குமார் ரேசிங் அணி 3-வது இடத்தைப் பிடித்து கவனம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) அபுதாபியில் நடைபெறவுள்ள கார் பந்தய போட்டிகளிலும் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்க உள்ளது. இதற்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அந்த அணி கலந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மலேசியாவில் அஜித் குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீ லீலா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல், தமிழக முதல்வரின் மருமகனான சபரீசனும் அஜித் குமாரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் தற்போது அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது
