நடிகை லட்சுமி மேனன் ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்தில் பிரபலமானார். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் நடிக்க வந்தபோது அவருக்கு எதிர்பார்த்த அளவுக்குப் படங்கள் அமையவில்லை. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஒரு பாரில் நடந்த மோதலில் அவரது பெயர் அடிபட்டது.
இதனால் அவர் தலைமறைவாகி பின் முன்ஜாமீன் பெற்றார். ஒரு வழியாக அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. சமீபத்தில் காமராஜ் இயக்கும் ஒரு புதிய படத்தில் நட்டி, விதார்த் ஆகியோருடன் லட்சுமி மேனன் ஒப்பந்தமானார். மலேசியாவில் படத்தின் பூஜை நடந்த நிலையில், படப்பிடிப்பில் அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, தொடர்ந்து நான்கு நாட்கள் படப்பிடிப்புக்கு வராமல் அறையிலேயே மயக்க நிலையில் இருந்ததாகவும், காலை 9 மணி படப்பிடிப்புக்கு மதியத்துக்கு மேல் வரத் தொடங்கியதாகவும் தெரிகிறது. இதனால், தயாரிப்புக் குழு அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக நடிகை ‘கயல்’ ஆனந்தியை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
