செல்லிடப்பேசிகள் திருடப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு துறை சார்பாக மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கைபேசி திருடப்படுவது தடுக்கப்படுகிறது. அனைத்து செல்லிடப்பேசி ஆப்பரேட்டர்களின் பயன்பாட்டில் உள்ள செல்லிடப்பேசிகளின் சர்வதேச செல்லிடப்பேசி கருவி அடையாள எண் இந்த மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறையில் இணைக்கப்படுகிறது. இது அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மத்திய அமைப்பாக செயல்படும். அப்போது ஒரு செல்லிடப்பேசி திருடப்பட்டு விட்டால் அந்த செல்லிடபேசி ஒரு தொலைதொடர்பு சேவையால் தடை செய்யப்பட்டால் அதனை வேறு ஒரு தொலைதொடர்பு சேவை நிறுவனத்தாலும் இயக்க முடியாது.

இதன் மூலமாக மற்ற சிம் கார்டுகள் மாற்றினாலும் அந்த செல்லிட பேசி இயங்காது. சி ஐ ஆர் திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து அலகுகளுக்கும் தனித்தனி லாகின் கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார் காவல்துறை டிஜி-ஐஜிபி பிரவீன் சூட். ஏற்கனவே இந்த திட்டம் தில்லி மற்றும் மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது மூன்றாவது மாநிலமாக கர்நாடகா  மாறி உள்ளது. இது குறித்து டிஜி -ஐஜிபி பிரவீன்சூட் கூறியதாவது, சி ஐ ஆர் மிக சரியாக  நடைமுறைப்படுத்தப்பட்டால் திருடு போகும் செல்லிடப்பேசிகளை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி செல்லிடப்பேசி திருட்டுகள் குறையும் என கூறியுள்ளார்.

மேலும் திருட்டுப் போன செல்லிடப்பேசிகளை சி இ ஆர் மூலமாக மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடை செய்ய, உரிமையாளர் அல்லது புகார் கொடுத்தவர் www.ceir.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ஒரு வேளை புகார்தாரர் அதனை தடை செய்ய முடியாவிட்டால் காவல்துறையினர் இ-லாஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் தடை செய்து கொள்ளலாம். அதன் பின் சிஇஆர் மூலமாக செல்லிடப்பேசி எங்கே இருக்கிறது என்று தகவல்  திரட்டும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.