நம்முடைய சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. ஆனால் இதனை பெறுவதற்கு பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. அதற்கான போலீசார் verification என்பது மிகவும் முக்கியமாகும். அது மட்டுமல்லாமல் பிபிசி எனப்படும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும் பெற மக்கள் காவல் துறையை நாட வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து பாஸ்போர்ட்டை அவசரமாக பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் போலீசுக்கு சுமார் 300 முதல் 500 வரை லஞ்சமாக பணம் கொடுக்கின்றனர். இந்நிலையில் இதனை மாற்றும் வகையிலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் M passport police app என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியின் மூலமாக 5 நாட்களில் பாஸ்போர்ட் இருக்கான வெரிஃபிகேஷன் பணியை முடித்து விடலாம். பயணியின் கையில் பாஸ்போர்ட்டை போலீசார் ஐந்து நாட்களில் ஒப்படைக்க வேண்டும். இந்த புதிய திட்டத்திற்காக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு 350 லேப்டாப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலி முறையால் காகிதம் இல்லாமல் பாஸ்போர்ட்டுகள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.