தில்லி சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட அதி நவீன சிகிச்சையால், அலுமினிய உறையோடு மாத்திரையை விழுங்கிய முதியவர் காப்பாற்றப்பட்டு உள்ளார். உணவு குழாய்க்குள் சிக்கி இருந்த அலுமினிய உறையோடு மாத்திரையை மிக புதுவிதமான என்டோஸ்கோபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அகற்றி உள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் அனில் அரோரா கூறியதாவது, மாத்திரையை பாதுகாக்கும் அலுமினிய உறையோடு கவனிக்காமல் முதியவர் விழுங்கிய நிலையில் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.

உடனே என்டோஸ்கோபி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதுவரையிலும் மருத்துவ வரலாற்றில் இது போன்ற நிகழ்வு பதிவானதாக தெரியவில்லை. இது போன்ற பாதிப்பு ஏற்படும்போது எவ்விதமான சிகிச்சையளிக்க வேண்டும் என்பது குறித்த புரிதல்களும் அப்போது இல்லை. எனினும் நிலைமையை மாற்றி யோசித்ததில் புது யுக்தி கிடைத்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.