போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் கொண்டுவரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில். இந்த சேவை பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையும் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இனி வரும் நாட்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்னும் கூடுதலாக சோலார் மின் உற்பத்தி தகடுகளை பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்து அதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதாவது மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் சோலார் தகடுகள் பொருத்தப்பட உள்ளது. அதற்கான இடங்களையும் ஆய்வு செய்து வருகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தில் சோலார் மின் உற்பத்தி மூலம் இதுவரை 6 கோடி வரை மின்சார கட்டணம் மிச்சமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிய சோலார் மின் தகடுகள் பொருத்துவதன் மூலமாக மின் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.