தமிழகத்தின் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சுகாதார மன்றத்தின் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பள்ளி நலன் சார்ந்து அறிவுரைகளை தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளி வளாகத்தையும் விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள பழுதடைந்த மேசைகள், நாற்காலிகள் மற்றும் அலமாரிகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதார மன்றத்தின் பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். புகையிலை மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.