தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு போதிய தண்ணீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் குருவை பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் விதமாக குருவை சாகுபடி செய்ய முதல்வர் கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

இருந்தாலும் காவேரியில் இருந்து கர்நாடக அரசு போதிய அளவு தண்ணீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வாடிய நிலையில் உள்ளது. இதனால் பயிர் பாதிப்பு விவரங்களை முறையாக கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.