சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் உடைய சிறந்த அனுபவம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.   விமான நிலையம் மற்றும் விமான பாதை ஆகியவற்றை மேம்படுத்துதல், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், கதவுகள் மற்றும் முனையங்களை முறையாக பயன்படுத்துதல், போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல், விமான சேவைகளின் முன்னறிவிப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் இந்த கூட்டுகுழு கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக விமான நிலையத்தில் ஏற்படும் காலதாமதமும் குறைக்கப்படும். நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பதும் இருக்காது. இந்த வசதிகள் அனைத்துமே ஏற்கனவே தனியார் விமான நிலையங்களில் இருக்கிறது. சென்னையில் வரும் மாதங்களில் ஒரு மணி நேரத்துக்கு இதுவரை 35 விமானங்கள் போக்குவரத்தில் இருக்கும் என்ற நிலை மாறி 45 விமானங்கள் என அதிகரிக்கும் பொழுது போக்குவரத்து நெரிசல் குறைக்க இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.