பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாடுகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி நாட்டுக்கு வந்தடைந்துள்ளார். தலைநகர் ரோம் நகருக்கு வந்த அவரை, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரவு உணவின்போது சந்தித்து மிகுந்த ஆவலோடு வரவேற்றார்.

இரவு விருந்துக்கு பிறகு  பிரதமர் மோடியும், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் ஒரே காரில் அமர்ந்து ரோம் நகரின் உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியம் அரங்கிற்குப் பயணம் செய்தனர். அங்கு இருவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க கொலோசியத்தைச் சுற்றிப் பார்த்தவாறே இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினர்.

இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “ரோம் வந்தடைந்ததும், பிரதமர் மெலோனியை இரவு விருந்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன்பிறகு, நாங்கள் புகழ்பெற்ற கொலோசியத்தை சுற்றிப் பார்த்தோம். பல்வேறு தலைப்புகள் குறித்து எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். இந்தியா-இத்தாலி நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதிக்கவுள்ள இன்றைய பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Thanthi TV (@thanthitv)

இதேபோல், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் பிரதமர் மோடியை “என் நண்பர்” என்று அழைத்து வரவேற்றுள்ளார். மெலோனி தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், கொலோசியம் அரங்கில் இருந்து பிரதமர் மோடியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தைப் பதிவிட்டு, “ரோமுக்கு வருக, என் நண்பரே” என்று தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல் மற்றும் பாதுகாப்பு விவாதங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பின்போது இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு, இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான ‘மெலோடி’ (Melody) சாக்லேட்டை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இணையத்தில் நெட்டிசன்களால் அதிகம் ரசிக்கப்படும் இவர்களின் நட்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த சுவாரசியமான நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.