கர்நாடக மாநிலம் பெங்களூருவில், நள்ளிரவில் பொதுச் சாலையில் படுத்திருந்த பசு மாட்டிடம் வாலிபர் ஒருவர் இயற்கைக்கு மாறான முறையில் அநாகரீகமாக அத்துமீறிய சம்பவம் சிசிடிவி  காட்சிகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக 24 வயது டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அதாவது கடந்த மே 5-ஆம் தேதி நள்ளிரவு 1.47 மணியளவில் இந்த அருவருக்கத்தக்கச் சம்பவம் நடந்துள்ளது. எனினும், கடந்த மே 17 அன்று GarudaInte  என்ற சமூக வலைத்தளக் கணக்கில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பதிவேற்றப்பட்டு, பெங்களூரு போலீஸார் டேக் செய்யப்பட்ட பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. வீடியோ ஆதாரத்தைக் கண்ட போலீஸார், உடனடியாகத் தானாக முன்வந்து (Suo Motu) வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் ஷாபாஸ் ஆலம் (24) என்பதும், அவர் பெங்களூருவில் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. சம்பவத்தன்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஷாபாஸ் ஆலம், சாலையில் படுத்திருந்த பசு மாட்டின் அருகே காத்திருந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் சாலையில் ஆள் நடமாட்டம் முற்றிலும் இல்லாததை உறுதி செய்துகொண்ட அவர், பசு மாட்டிடம் இயற்கைக்கு மாறான முறையில் அநாகரீகக் குற்றத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியிருந்தன. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.